பக்கம்:நனவோட்டங்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 : ரா, சீனிவாசன் போட்டியாக அவள் ஒருவனை மணந்து காட்டி இருக்க வேண்டும் என்று என் கருத்தைத் தெரிவித்தேன். "சரியான பாடம்தான்” என்றாள். எனக்கு அவளிடம் அதிகமான ஈடுபாடு ஏற்பட்டது. 7 அன்று விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை. ஒவியர் அன்று படம் வரையச் செல்லவில்லை. வாரம் ஏழு நாட்கள். ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறது. அதை அவர் வேலை செய்து வந்த நாட்களில் அனுபவித்து இருக்கிறார். அதே பழக்கம் அவரை விடவில்லை. தான் எழுதிவரும் ஒவியத்துக்கும் அன்று விடுதலை தந்துவிட்டார். அவர் வாழ்ந்த குப்பத்தில் அவரை ‘வாத்தியார்' என்றே அழைத்து வந்தார்கள். அதாவது அவர் பள்ளிக் கூடத்தில் வேலை செய்து வந்தவர் என்பது அர்த்தம். ஒவியர் என்றால் அங்கு இருக்கின்றவர்களுக்குத் தெரிவதில்லை. அவர் 'மக்கள் மன்றம்' என்ற ஒன்றைத் துவக்கி நடத்தி வருவதாகச் சொல்லியிருந்தார். அங்கு வந்து அதைப் பார்த்துப் போகும்படி சொன்னார். மன்றம் என்று சொல்லும் பொழுது என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வருகின்றன. கல்லூரியில் இலக்கிய மன்றங்கள் தெரியும். பட்டிமன்றங்கள் பார்த்திருக்கிறேன். கவியரங்கங்கள் கேட்டிருக்கிறேன். மிகவும் பிடித்தமான கூட்டங்கள்; வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத பேச்சுகள் நடைபெறும். கேட்பதற்குச் சுவாரசியமாக இருக்கும். கவிஞர்கள் சொல்லடுக்கோ அழகாக இருக்கும். விஷயம் ஒன்றுமே இருப்பதில்லை. இலக்கிய மன்றங்களில் சொற்பொழிவுகள் நடக்கும். சிலப்பதிகாரம் தவிர வேறு எதுவும் பேசிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/86&oldid=772988" இலிருந்து மீள்விக்கப்பட்டது