பக்கம்:நனவோட்டங்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 85 கேட்டதில்லை. பட்டி மன்றங்களில் பேசியவர்களே பேசுவார்கள். காரமான பேச்சு சாரம் எதுவும் இருக்காது. தம்பியர்களில் யார் சிறந்தவர்கள் என்பார்கள். கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்பது பற்றிப் பேசு வார்கள். முடிவு நீதிபதி சொல்லுவார். நீதிபதிப்பதவி மேடையோடு முடிந்து விடும். சொல்லாற்றல் வியக்கத் தக்கதாக இருக்கும். ரசிக மன்றங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன். பழகியது இல்லை. சிவாஜி மன்றம், எம்.ஜி.ஆர். மன்றம், கலைஞர் மன்றம் இப்படியே மன்றங்களைப் பார்த்திருக் கிறேன். எனக்கும் பழைய காலத்து பஜனை மடங்கள் சில சமயம் நினைவுக்கு வருவது உண்டு. இவை எல்லாம் தேர்தல் காலத்துக்காகப் பயன்படுத்துவதற்காக எழுப்பப் படுகிறது வழக்கம் என்பதை அறிய முடிந்தது. இவற்றில் ரசிகத் தன்மையைவிட அரசியல்தான் தலைமை பெற்றது. அதுகூட தேர்தலுக்காகவே ஏற்படுத்தப்படுகின்றன. வ.உ.சி. மன்றம் என்பது எனக்குப் பழக்கமான மன்றம். அது வ.உ.சியைப் பற்றி இருக்காது. கட்சிப் பிரச்சாரத்துக்காக அமைக்கப்பட்ட இடம் ஆபீசில் வேலை செய்கிறவர்கள் அரசியலில் நேராகக் கலக்க முடிவதில்லை. அதற்காக இந்தப் புனை பெயர்கள் என்பது பின்னால் தெரிந்து கொண்டேன். தனிப்பட்ட தலைவர்களின் பெயர்களை வைக்காது பொதுவாக மக்கள் மன்றம் என்று வைத்தது எனக்கு நியாயமாகப் பட்டது. அதுதான் அவர் ஞாயிற்றுக்கிழமை பொழுது போக்கும் இடம் என்பதை அறிந்தேன். என்னை அங்கு வரும்படி அழைத்திருந்தார். எனக்கும் அங்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. 'அவளை என்னால் மறக்க முடியவில்லை. அங்கு அவளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/87&oldid=772989" இலிருந்து மீள்விக்கப்பட்டது