பக்கம்:நனவோட்டங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ரா. சீனிவாசன் அதற்கு முன் வாரம் உஷா அவள் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தாள். நான் துணிந்து போனேன். நான் அவளுக்கு மேல் அதிகாரியாகப் பணி செய்கின்றேன் என்பதால் தனி வரவேற்புக் கிடைத்தது. மற்றும் எனக்குத் திருமணம் ஆகவில்லை என்பதுகூட உதவியது. அவர்களின் ஆசை அவர்கள் குடும்பத்துப் பிரச்னைகளில் ஒன்றை என்னைக்கொண்டு தீர்த்துவிடலாம் என்பது. "இவள்தான் என் தங்கை" என்று அறிமுகப்படுத்தி னாள் உஷா தன் தங்கையைக் காட்டி அம்மாவின் கண் கொண்டு அவள் தங்கையைப் பார்த்தேன். லட்சணமான பெண். அடக்கம் ஒடுக்கம் நடுக்கம் பணிவு பரிவு இந்தச் சர்டிபிகேட்டுகள் அவளிடம் நிரம்பி இருந்தன. அவளுக்காக பாங்கியில் பத்தாயிரம் போட்டிருந்தார்கள். அவள் கலியாணத்துக்காக இன்ஷாயூரன்சில் கட்டி யிருந்தார்கள். முப்பது சவரனுக்கு மேலே இருக்கிறதாம். பி.யு.சி. வரை படித்து முடித்துவிட்டாள். அதோடு அவள் படிப்புக் கடமை முடிந்துவிட்டது. அதற்கப்புறம் அந்தப் பெண் படிப்பதை அப்பா விரும்பவில்லை. பணம் செலவழிக்க விரும்பவில்லை. அதற்கு அவள் எடுத்துக் கொண்ட பாடமும் உதவியது. விஞ்ஞான பாடத்தில் அவள் வெற்றி பெறுவது அரிதாகி விட்டது. முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. அவளுக்குத் தக்கவன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது அவர்கள் குடும்பப் பிரச்னையாக இருந்தது. இப்படி ஏதாவது பிரச்சனைகள் இருந்தால்தான் வாழ்க்கையே சுவாரசியாாக இருக்கிறது என்று எண்ணத் தொடங்கினேன். அககா மணமானவள். ஆனால் அது மணம் பெறவில்லை. என்றாலும் அந்த அனுபவம் குடும்பத்தை விட்டு மறைந்துவிட்டது என்றுதான் சொல்லமுடியும். அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/88&oldid=772990" இலிருந்து மீள்விக்கப்பட்டது