பக்கம்:நனவோட்டங்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 87 தெரியவில்லை. கை உடையும்போது தான் கவலை; முடமாகி விட்ட பிறகு அது சாதாரணமாகி விடுகிறது மற்றவர்களுக்கு. உடைந்தவனுக்கு மட்டும்தான் அது காலத்துக்கும் வாழ்க்கைப் பிரச்னை. அவளுக்கும் கலியாணமாகி விட்டால் அது ஒரு பெரிய பாரம் தீர்ந்தது போல் ஆகும். பையனைப் பற்றிக் கவலை இல்லை. இது அவர் சொன்னது. இது ஒன்றுதான் அவள் அப்பா என்னிடம் பேசியது. அப்புறம் அவர் என்னிடம் பேசியது இல்லை; எனக்கு அவரிடம் பேசவும் தோன்றவில்லை. பேசினால் அவர் கிரிமினல் அனுபவங்களைக் கேட்கலாம். பத்திரிகை களில் சில மாஜி அதிகாரிகள் தம் அனுபவங்களை எழுதி வருகிறார்கள். அதைப்போல இவரிடமும் கேட்கலாம். அவரைப் பார்த்தால் அப்பாவியாகத்தான் காணப் பட்டார். போலீசுக்கு வேண்டிய துணிவும் துடுக்குத்தனமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்ததாகவும் தெரிய வில்லை. அவர்கள் பேச்சு சுற்றிச் சுற்றி டெலிவிஷனைச் சுற்றியே இயங்கியது. அதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு ஏற்படவில்லை. 'வயலும் வாழ்வும்' என்று காட்டுகிறார்கள். அதை வயலும் பார்ப்பதில்லை. அதை நம்பி வாழ்பவரும் பார்ப்பதில்லை. சிறுவர்களுக்கு எனக் கதை பேசுகிறார்கள். அதைப் பெரியவர்களும் பார்க்கிறார்கள். இப்பொழுது எவ்வளவோ மேல் முன்பெல்லாம் இருபது அம்சத் திட்டம். அதைச் சுற்றியே எல்லாம் சுழன்று கொண்டிருந்தன. நாடகங்கள் ஒன்று இரண்டு நன்றாக இருந்தன. கால்கட்டு பிரமாதமாக இருந்தது. சில ஒன்றுமே இருப்பதில்லை. எப்படியோ அவர்களும் ஒலியும் ஒளியும் உண்டாக்கிப் பரப்பி வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/89&oldid=772991" இலிருந்து மீள்விக்கப்பட்டது