பக்கம்:நனவோட்டங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 7 பிரமாதம். கதைதான் சரியாக இல்லை. இராசாசி எழுதியது. அவர் கதை நீதிக் கதைகள். படிப்பதற்கு நன்றாக இருக்கலாம். படத்துக்குச் சரியாக இல்லை. கதை படிக்கிறவர்கள் மனசாந்திக்குப் படிக்கிறார்கள்; படம் பார்க்கிறவர்கள் புதுமையை நாடுகிறார்கள். அந்தக் கதையில் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அது சரியான முடிவு அல்ல; தப்பு செய்கிறவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டால் இந்த உலகத்தில் ஒருவர் கூட உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. அதனால்தான் அந்தப் படம் எனக்குப் பிடிக்க வில்லை. ஆனால் நடிப்புப் பிரமாதம் என்று அப்பொழுது நினைத்தேன். இங்கே கதை பிரமாதம்; நடிப்புச் சாதாரணமாக இருந்தால்கூட அது எடுத்துக் கொடுக்கிறது. எனக்கு இப்பொழுது ஜெயகாந்தன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் சில நேரங்களில் சில மனிதர்கள் பிரமாதமான கதை. பெண்ணின் உயர்வுக்குப் பாடுபடும் அதி அற்புதமான கதை. நாவலே ஒருமுறை படித்திருக் கிறேன். திரைப்படம் நல்ல வெற்றி கவிஞர்களுள் எனக்கு நா. காமராசன் நிரம்பப் பிடித்திருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. அப்படி ஒன்றும் அவர் நிறைய கவிதைகளை எழுதித் தள்ளவில்லை. ஒரு கவிஞனின் உயர்வுக்கு அவன் பாடும் பாடல்களின் எண்ணிக்கை அடிப்பை அல்ல; அந்த எழுத்து உலகுக்கு உணர்த்தும் உணர்வுதான் காரணம் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் ஒதுக்குகிறவர்களை அவர் ஒதுக்க வில்லை, அதுதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது என்னமோ எனக்கு இது மாதிரி மனநிலை; மற்றவர்கள் தவறு என்று சொல்லுவதை என்னால் ஒப்புக்கொள்ள முடிவதில்லை அது சரி என்று சொல்லுவதில் எனக்கு ஒரு திருப்தி, அதைக் குதர்க்கம் என்று ஒரு சிலர் நினைக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/9&oldid=772992" இலிருந்து மீள்விக்கப்பட்டது