பக்கம்:நனவோட்டங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ரா. சீனிவாசன் சில வயசான மாதர்கள் பெண்கள் அல்ல. அவர்கள் மேக்கப் செய்துகொள்வதுதான் அநியாயம். அங்கு மேக்கப் தான் தெரிகிறது. அவர்கள் தெரிவதில்லை. சில பேருக்குத் தமிழ் பேசத் தெரிவதே இல்லை. பெரிய ஆபீசர்கள் அவர்களுக்குத் தமிழ்தான் பேசத் தெரியாது. எனக்குக்கூட அங்குப் போய்ப் பேச விருப்பம்தான். எதைப் பற்றிப் பேசுவது. கவிதைகளைப் பற்றிப் பேசலாம். அது மட்டும் என்ன பாரதி பாரதிதாசன். இதற்கு மேல் யாரும் பாராட்டுவது இல்லை. நா. காமராசனின் கறுப்பு மலர்களைப் பற்றிப் பேசச் சொன்னால் அழகாகப் பேச முடியும். நடைபாதையைப் பற்றி அழகான கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஏழைகள் படுத்து உறங்கும் புழுதிக் கட்டில் இது நடைபாதைக்குத் தந்த விளக்கம். இதைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பது உண்டு. இந்தக் கலகலப்பான குடும்பம் எனக்கு உண்மையில் இதயத்துக்கு இனிமை தந்தது. முக்கியமாக அங்கு உஷா குடி கொண்டிருந்தாள். எனக்கு அவள் தங்கையைக் கொஞ்சம்கூட பிடிக்க வில்லை. அவள் அழகாக இல்லை. சாதாரண பெண் அவ்வளவுதான் என்னமோ பிறந்தாள் படித்தாள் வளர்ந்தாள் பெரியவள். ஆனாள். கலியான வயது. அவளுக்குக் கொஞ்சநாள் ஆனால் கலியாணமாகி விடும். என் எதிர் காலம் நினைவுக்கு வந்தது. உஷா ஸ்கூட்டர் வாங்கச் சொன்னாள். அதைப் போன்று ஒன்று பின்னால் பிடித்துக் கொண்டு போவாள். சே! அது வாழ்க்கைச் சக்கரம் அதில் எந்தச் சித்திரமும் இல்லை. - உஷாவிடம் தான் எனக்குக் கவர்ச்சி ஏற்பட்டது. அவளோடு ஆபீஸில் பழகும் பழக்கம் ஒரு காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/90&oldid=772993" இலிருந்து மீள்விக்கப்பட்டது