பக்கம்:நனவோட்டங்கள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன. வோட்டங்கள் 89 அவளிடம் ஏதோ சொல்லத்தக்க செய்திகள் இருந்தன. அம்மா சொல்லுவாள். உனக்குக் கலியாணமாகி இருந்தால் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி இருப்பேன் என்று. அந்த வயதுக்கும் உஷாவின் வயதுக்கும் பொருத்தமாகத் தான் இருக்கும். அவள் எனக்குக் கிடைப்பதாக இருந்தால் நான் ஒவியரின் சித்திரத்தைப் பார்க்க வேண்டியது இல்லை. உஷா அழகான பொம்மை. அதை வைத்து விளையாடுவது இன்பமாக இருக்கலாம்; ஆனால் ஒவியத்தின் முழு அழகை அதில் காண முடியாது. அழகைவிட வேறு ஒன்று ஏதோ ஒன்று இருக்கிறது. அது கவர்ச்சி. அது அவளிடம் தான் இருந்தது. அது ஒவியரின் குடிசையை அழகு செய்தது. 'அவள் உஷாவின் தங்கையைப் போல் முகராத மலர் அல்ல; வண்டு மொய்த்துத் தேன் உண்டுவிட்டது. ஆனால் வாடவில்லை. மலர் ஒரு முறைதான் மலரும். பெண் அப்படி அல்ல. இதைப் போன்ற எண்ணம் அவளிடம் உதயம் ஆகியது. உஷாவைச் சுற்றி வண்டு மொய்த்தது. ஆனால் மயங்கவில்லை. எனக்கு ஏதோ கதை எழுதுவது போல் இருந்தது. இவர்களைப் பற்றி நினைக்கும்போது, மறுபடியும் இந்நினைவுகள் ஒவியர் வீட்டிற்குச் செல்லத் துாண்டின. அதுதான் அடுத்த வாரம் அவள் வாழும் குப்பத்திற்குச் சென்றேன். கடைசியில் வந்து சேர்ந்தேன். அதுதான் கண்ணம்மாவின் குடிசைக்கு பழங்காலத்து ஏதோ முனிவர் கண்ணுவர் ஆசிரமம் என்று நினைக்கிறேன். அங்கேதான் சகுந்தலை வளர்ந்தாள். இங்கு இந்தச் சகுந்தலையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/91&oldid=772994" இலிருந்து மீள்விக்கப்பட்டது