பக்கம்:நனவோட்டங்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ரா. சீனிவாசன் குழந்தைகள் மானோடு விளையாடவில்லை; நாய்க்குட்டி யோடு விளையாடின. கதிரவன் வெய்யில் எப்படி குழந்தைகளின் நிறத்தை மாற்ற முடியும் என்பதற்கு அக்குழந்தைகள் சான்று பகன்றன. நிழலில் வளரும் செடிகள் ஒளி இழக்கின்றன; வெய்யிலில் காயும் குழந்தைகள் அழகிய நிறத்தை அதுதான் கறுப்பு நிறத்தைப் பெற்று விளங்கின. நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா முற்றத்தில் அவை வளரவில்லை. கறுப்பிலே அழகில்லை என்று என்னோடு வாதிட்டால் நிச்சயமாகத் தோற்று விடுவார்கள். நிறத்தால் மட்டும் அழகு உண்டாவது இல்லை; நோயற்ற உடம்பில்தான் அழகு உண்டாகிறது. அதற்கு மனம்தான் காரணம். அந்த நல்ல மனம் அந்தக் குழந்தைகளிடம் இருந்தது. ஏன் ஒவ்வொரு குழந்தையும் அழகாகத்தான் இருக்கின்றன. அது நல்ல மனம் உடையது. எல்லோரும் சாதிக் கலப்பு வேண்டும் என்கிறார்கள். இது முதற்படி இதுவே முழுமை என்று கூற முடியாது. என்னைப் பொறுத்தவரை கலப்பு மணம் என்பது வசதி உடையவன் வசதியற்றவளை மணம் செய்து கொள்வது என்பதுதான். அதைத்தான் நான் அவளிடம் மேற்கொள்ள விரும்பினேன். சாதிக் கலப்பால் மட்டும் அவர்கள் மனம் மாறி விடுவது இல்லை. அவன் செட்டியாக இருப்பான்; மலையாளியை மணப்பான்; மறுபடியும் செட்டியார் என்ற பெயன்ர மட்டும் போடாமல் இருக்க மாட்டான். அவன் தான் வைசியர் சங்கத்துக்குத் தலைவனாக இருப்பான். தேர்தலே சாதியின் அடிப்படையில் நடக்கும் பொழுது அது அவ்வளவு எளிதாக மாறிவிடும் என்று சொல்வதற்கு இல்லை. வடநாட்டில் தீண்டாமை ஒழிப்புப் பற்றித் தீவிரப் பிரச்சாரம் நடைபெறுகிறது. அதை நோக்கத் தமிழகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/92&oldid=772995" இலிருந்து மீள்விக்கப்பட்டது