பக்கம்:நனவோட்டங்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன. வோட்டங்கள் 91 முன்னேறி விட்டது என்று தான் கூற முடியும். அவர்களுக்குச் சம அந்தஸ்து தருவதற்கு அரசாங்கம் பாடுபட்டுக்கொண்டு வருகிறது. விரைவில் அவர்கள் முன்னேறி விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் சொன்னார் அதுதான் ஒவியர்; "சாதி ஒழிப்பு என்று பேசுகிறார்கள். ஆனால் ஏழைகளைத் தனியே ஒதுக்கி அவர்களுக்கு அடுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கிறார்கள். இது ஒரு புது சாதியை உண்டாக்கப் போகிறது” என்றார். இது ஒரு புதிய சிந்தனையாக இருந்தது. அதற்கு முன்னால் நான் இதைப் போன்ற இடங்களுக்குச் சென்றது இல்லை. அங்குச் சென்ற பிறகுதான் நரகம் என்றால் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன். வறுமையின் கோரப்பிடியில் இங்கே அக்குடிசைவாழ் மக்கள் எப்படித் தவிக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அந்தப் பகுதி வாரியம் கட்டிக் கொடுத்த கட்டிடம் அல்ல; பரம்பரையாக வரும் குடிசைகள் இருக்கும் இடம் தான். சுவர்கள் எல்லாம் நிலையாமையை அறிவித்துக் கொண்டிருந்தன. கிழிந்த கோணிகள் திரைச் சீலைகளாக நடித்தன. அங்கே தெருக் குழாயடியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கட்டியிருந்த புடவைகளே அக் குளியலை மறைக்கும் சுவர்களாக இருந்தன. இந்தக் குடிசைகளை மாற்றி ஒழுங்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்த அரசாங்கத்தை உண்மையில் நான் பாராட்டுகிறேன். அவர்களையும் மனிதர்களாக மதித்து உயர்த்தி இருக்கிறார்கள். உயரமான கட்டிடங் களைத் தந்து இருக்கிறார்கள். அந்த மாடி வீடுகளில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. தனித்தனியாகப் பிறரோடு பேசாமல் அவர்களால் இருக்க முடிவது இல்லை. பசியும் பட்டினியும் அவர்களோடு நான்கு சுவர்களுக்குள் நின்றுவிடுகின்றன. வயதானவர்கள் மாடிப்படிகள் ஏறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/93&oldid=772996" இலிருந்து மீள்விக்கப்பட்டது