பக்கம்:நனவோட்டங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 93. "அவரவர் விருப்பப்படி படிக்கட்டும். ஜனநாயக நாட்டில் எல்லாக் கட்சிகளும் வளர வேண்டும்" என்றார். "ஆனால் ஒன்றுதானே ஆட்சிக்கு வரமுடியும்" "எந்தக் கட்சியும் நிலைத்து இருப்பது இல்லை. இருக்கவும் முடியாது. அடுத்த கட்சி உருவாகத் தானே வேண்டும்.” "இப்படி மாறிக் கொண்டே இருந்தால்" "அதுதான் வளர்ச்சி." "முடிவில் எந்தக் கட்சிதான் வரும்?" "உண்மையான சமுதாய சமதர்மத்துக்குப் பாடுபடும் கட்சிதான் நிலைத்திருக்கும்" என்று கூறினார். "எப்படிக் கூறுகிறீர்கள்?" "ஏழைகள் தான் இந்த நாட்டில் பெரும்பான்மை." "அதாவது பொது உடைமைக் கட்சிகள் தாம் வாழும் என்று நினைக்கிறீர்களா?" "அப்படிச் சொல்ல முடியாது. சம உரிமை, சம அந்தஸ்து, சம உடைமை மூன்றும் அளிக்கக்கூடிய சமதர்மக் கட்சிதான் உருவாகும். அதுதான் சமுதாயம் நோக்கிச் செல்லும் பாதை" என்றார். "நீங்கள் இங்கே கதா காலட்சேபங்கள் ஏதாவது" "அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அது மத்தியதரக் குடும்பங்கள் பழைய சம்பிரதாயங்களைக் கட்டிக் காக்க நடத்துவது. அவ்வளவு பெரிய பணக்காரர்கள் இங்கே இல்லை, அரசியல் கட்சிக்கு நிதி உதவ. இங்கே பொதுக் கூட்டங்கள் நிறைய நடக்கும். எங்களுக்குப் புராணக் கதைகளில் நம்பிக்கை கிடையாது, அரசியல் பேச்சுக்களைக் கேட்கிறோம். அன்றாடப் பிரச்சனைகளில் தான் எங்களுக்கு ஆர்வம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/95&oldid=772998" இலிருந்து மீள்விக்கப்பட்டது