பக்கம்:நனவோட்டங்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 ரா, சீனிவாசன் "அதில் அடிதடி உண்டாகுமே" "அதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. நாட்டிலே வேலை நிறுத்தங்கள் நடைபெறுகின்றன. அதைக் கண்டு பத்திரிகைகள் கண்டிக்கலாம். மாணவர்கள் கிளர்ச்சிகள் நடத்துகிறார்கள். குழப்பங்கள் விளைகின்றன. நிச்சயமாக நல்ல விளைவுகள் நேராமல் போகாது. தேக்கத்தைப் போக்கப் பாடுபடும் முயற்சிகள் போராட்டங்கள் என்று கூறலாம். எங்களுக்குத் தொடர்பு இல்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சென்றால் அப்படித்தானே இருக்கும். நேரிடையாக எதைப்பற்றிப் பேசுவது. எனக்கு இதுபோலப் பொதுப் பிரச்சனைகளைப் பேசுவதுதான் விருப்பம் அதிகம். "அவள் கணவன் படத்தைப் பூசைசெய்துகொண்டு இருப்பாள் இல்லையா?" என்று மெல்ல அவளைப்பற்றிப் பேச்சுக் கொடுத்தேன். அவர் சிரித்தார். கருத்தை மறுப்பதற்குச் சிரிப்பு எப்படிப் பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். நீங்கள் இங்கு இருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறியமாட்டீர்கள். நாங்கள் சாவுக்கு மத்தியில்தான் வாழ்கிறோம். நீங்கள் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கலங்கலைக் குடித்துச் செத்தவர்களின் பட்டியல் உங்களுக்குத் தெரியும். வெள்ளம் வந்து அடித்துக் கொண்டு போன குடிசைகள் ஏராளம். தீ விபத்து இங்கு தான் வரும். எங்களுக்குள்ளேயே நடக்கும் அடிதடி சண்டைகள். இங்கே பலபேர் வேறு வழியில்லாமல் திருடப் போவார்கள். அவர்கள் பல குடும்பங்கள் பிக் பாக்கெட்டுகள் இங்கே உற்பத்தி ஆவார்கள். அவ்வப் பொழுது அவர்கள் சாதாரணமாகச் சிறையில் இருந்துவிட்டுத் திரும்பி விடுவார்கள். அவர்களை யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/96&oldid=772999" இலிருந்து மீள்விக்கப்பட்டது