பக்கம்:நனவோட்டங்கள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 95 வெறுப்பது இல்லை. அவர்களும் இங்கே கவுரவமாகவே நடத்தப்படுவார்கள். போலீசுக்குத் தெரியும். அவர்களும் அவர்களைக் கண்காணிப்பார்களே தவிர அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். வேலை எங்கே கிடைக்கிறது. மேல்மட்டத்தில் வேலை இல்லாப் பிரச்சனை; இங்கேயும் அப்படித்தான். இங்கே பல திறப்பட்ட சங்கங்கள். தேர்தல் காலங்களில் சுறுசுறுப்பாக வேலை கிடைக்கும். போஸ்டர் ஒட்டுவது, கூட்டங்களை அமைப்பது; கோஷம் போடுவது; கொஞ்சம் பணம் நடமாடும். பிறகு மந்தமாக இருக்கும். எப்படியோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவள் ஒருத்தி மட்டும் படத்தை மாட்டிப் பூசை செய்ய முடியுமா? அப்படியானால் பல வீடுகளில் இந்தப் படங்களை மாட்டிவைக்க வேண்டிவரும். "அதோ பார் அந்தப் பையனைக் கேள். அவன் அப்பா எங்கே என்று" என்று ஒரு பையனைச் சுட்டிக் காட்டினார். அவன் சட்டை கார் ஆயில் கறையில் முழுகி இருந்தது. தலை மொட்டை அடித்துக் கொண்டிருந்தான். அவன் திருப்பதிக்குப் போய் வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் பார்த்து எனக்குப் பழக்கம். அவன் அப்பாவை விட அவன் மொட்டையில் தான் எனக்குக் கவர்ச்சி ஏற்பட்டது. "தம்பி! மொட்டை” "என் பெயர் மொட்டை இல்லை சார். அது வேறு ஆள்; அவன் தலைமுடி வைத்திருப்பான்!” என்றான். "இல்லை திருப்பதிக்கு" "அதெல்லாம் இல்லை. கிராப்புக்கு அதிகம் காசு கேட்கிறான். இதுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/97&oldid=773000" இலிருந்து மீள்விக்கப்பட்டது