பக்கம்:நனவோட்டங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ரா. சீனிவாசன் "அது மட்டும் இல்லை தலைக்கு எண்ணெய் தேவை இல்லை. செலவு மிச்சம்” என்றான். "அசிங்கமா இல்லையா?" அந்தச் சிறுவன் சிரித்தான். அதற்கு அர்த்தம் இருப்பதாக அவன் அகராதியில் இடம் பெறவில்லை. "உங்க அப்பா' "அவர் செத்து இரண்டு வருஷம் இருக்கும், சரியாகக் கவனம் இல்லை' என்றான். அதற்காகக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. என் நினைவுகள் வேறு எங்கோ சென்றன. பத்திரிகைகளில் அதுவும் ஆங்கிலப்பத்திரிகைகளில் விடாமல் வருந்துவதாகப் பெரிய மனிதர்களின் படங்கள் இடம்பெற்று வருவதை நினைத்துப் பார்த்தேன். அந்தப் படங்கள் என் நினைவில் மின்னலைப் போல் தோன்றிப் பளிச்சிட்டன. சமுதாயத்தின் இருவேறு நிலைகளைக் காண முடிந்தது. அங்கே ஒரு கடையில் சுறுசுறுப்பாகச் சிலர் சூழ்ந்து கொண்டிருந்தனர். என் பார்வை அங்குச் சென்றது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன். கையில் பழைய தவலை செம்பு டேக்ஸா இவற்றை அங்குக் கொண்டு போய்ப் பத்திரப் படுத்தினார்கள். நல்லவர் சேட்" என்று சொல்லிக்கொண்டு பத்து ரூபாய் நோட்டை எண்ணிக் கொண்டு வருவதைப் பார்த்தேன். பக்கத்தில் ஒரு வைத்தியர் கடை திறந்து வைத்திருந்தார். இளையவர், தெரியாமல் அங்கே தொழில் நடத்தத் தொடங்கினார். அங்கே ஆளே இல்லை. மெல்ல அவரிடம் பேசிப் பார்த்தேன். "இங்கே நல்ல பிராக்டிஸ் தானே"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/98&oldid=773001" இலிருந்து மீள்விக்கப்பட்டது