பக்கம்:நனவோட்டங்கள்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 97 "தவறான முடிவு செய்து விட்டேன். ஏழைகள் மத்தியில் எங்களுக்கு இடம் இல்லை. இங்கே நோய் இருக்கிறது; பணம் இல்லை. இவர்களுக்கு உடம்பு நோயைவிட வாழ்க்கை நோய் தான் மிகுதி" என்றார். "இந்தக் கடையையும் இந்த மார்வாடியே எடுத்துக் கொள்ளப் போகிறார்” என்று முடித்தார். வைத்தியப் படிப்புப் படித்தவர்களுக்கும் வேலை இல்லை என்பதை அவரைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். எனக்கு 'டீ சாப்பிட வேண்டும் போல் தோன்றியது. 'நீங்கள் டீ சாப்பிடுகிறீர்களா?" என்று ஒவியரைக் கேட்டேன். "நான் இப்பொழுது அதிகம் சாப்பிடுவது இல்லை” என்று பதில் சொன்னார். நடுத்தரக் குடும்பங்களில் சிலரைப் பார்த்திருக் கிறேன். - "நான் காப்பி குடிப்பதில்லை” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது ஒரு பெருமையாக நினைத்துக் கொண்டு பேசுவது எனக்கு வெறுப்பைத் தந்தது உண்டு. - மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி என்ற கட்சியைச் சார்ந்தவர்கள் இவர்கள். வாழும் வரை நன்றாக வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான். அப்படிக் காப்பிக் குடிப்பதால் இந்த உடம்பு கெட்டு விடுவதால் அப்படித்தான் போகட்டுமே என்ற கொள்கை உடையவன் நான். அதைப் போல இவரும் மாறிவிட்டாரோ என்று ஆச்சரியப்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/99&oldid=773002" இலிருந்து மீள்விக்கப்பட்டது