பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சின்னாத்தா முதலியாரின் வரலாற்றுச் சுருக்கம் தோற்றம்: மு. தாமோதரன் என்னும் சின்னாத்தா முதலியார் புதுவை முத்தியால் பேட்டையில், 1903 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள், முத்துசாமி முதலியார் - அம்மணி அம்மா ஆகியோரின் திருமகனாகத் தோன்றினார். தொழில்: உரிய கல்வி பெற்றதும், வணிகத் துறையை மேற் கொண்டார். வாணிகத்திற்காக மலேசியா, சிங்கப்பூர் பிலிப்பைன்சு முதலிய நாடுகட்குச் சென்று தங்கிவந்துள் Gттrio. குடும்பம்: 9-9-1925ஆம் நாள் தம் தமக்கையார் மகளாகிய பவுனாம்பா என்னும் அம்மையாரை மணந்து கொண் டார். இவர்கட்கு அன்னபூரணி என்னும் மகளும் பால சுப்பிரமணியன் என்னும் மகனும் உள்ளனர். விடுதலை இயக்கம்: இளம் பருவம் முதற்கொண்டே அயலார் ஆட்சிக்கு எதிரான தேசீய இயக்கத்தில் ஈடுபட்டு நாட்டு விடுதலைக் குப் பாடுபட்டார். இவர் தேசீய இயக்கத்தின் வலிமை பெற்ற தலைவராக 45 ஆண்டுகட்கும் மேலாக அருந் தொண்டு ஆற்றினார். . விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட இவர், இயக் கத் தொண்டர் பலருக்குப் பொருள் உதவி புரிந்துவந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நன்னெறி_நயவுரை.pdf/10&oldid=773004" இலிருந்து மீள்விக்கப்பட்டது