பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை, மதியார் தமையடைந்தோர் -தம்மின் இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு கழியினும்செல் லாதோ கடல். எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ-பைந்தொடீ நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க் கன்றும் உதவும் கனி. இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய் அதிர்வளையாய் பொங்கா தழல்கதிரால் தண்ணென் கதிர் வரவால் பொங்கும் கடல். நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ அல்லோர் வரவால் அழுங்குவார்-வல்லோர் திருந்தும் தளிர்காட்டித் தென்றலால் தேமா வருந்தும் சுழல்கால் வர. பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம் எரியின் இழுதாவர் என்க-தெரியிழாய் மண்டு பிணியால் வருந்தும் பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். 16 17 18 19 20