பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


நூல் கற்றோர் தெளிந்து வணங்கும் சிவனது ஒளி விடும் திரு முடியைக் கண்டதும், விண்ணிலிருந்து விழுந்த தேவகங்கையின் வெள்ளம் முடிக்குள் புக்கு அடங்கியது. அதுபோல், நல்ல நூல்களின் ஆழம் அறியாமல் நுனிப்புல் மேய்ந்தவரின் கல்வியின் அகலம் முழுதும், ஆழ்ந்த கல்வி யுடையோர் முன்னே மறைந்துவிடும். 21 கொடிய பாம்பிடமிருந்து வந்த உயர்ந்த மாணிக் கத்தை வேண்டிய தில்லை என விலக்குபவர் யார்? யாரு மிலர். உயர்ந்த கடலிலிருந்து வந்த நஞ்சை எவரும் விரும் பார். அதுபோல், உயர்த்தும் கல்வியறிவாலன்றி, பிறந்த குலத்தைக் கொண்டு, மேலான உயர்வையோ கீழான தாழ்வையோ தீர்மானிக்கலாகாது. 22 நெகிழ்ந்து விம்முகின்ற மார்பகம் உடைய பெண்ணே! வன்மையான கருங்கல்லிலும், எளிய எறும்புகள் பலகாலம் ஊர்ந்து செல்லச் செல்லக் குழி விழுந்து விடுவது போல், உடம்பை விற்கும் விலை மகளிரும், நல்ல நோன்பு செய் வதைப் பலகாலம் மேற்கொள்ளக் கொள்ள, அவரது நல்ல மன வலிமை சிறப்பு தரும். 23 வண்டுகள் மலர்ப் படுக்கையை விரும்பும் செழுமை யான சோலையில், காக்கை விரும்புவது கசக்கும் வேப்பங் காய் கனியைத் தானே! அது போல, ஒருவரிடம் உயர்ந்த குணங்கள் பல இருப்பினும், கீழோர், அவரிடம் உள்ள ஒரு குற்றத்தையே எடுத்துப் பேசுவர். 24 வில்லிலிருந்து வரும் அம்புபோல் பொலிவு பெற்ற கரிய கண்களை உடையவளே! (நீரில் மிதக்கும்) தெப்பத் தில் ஏற்றப்படும் கனமான பொருள்களும் இலேசாகத் தோன்றுவதுபோல், கற்றறியாத கீழ்மக்களின் நடுவே, கற்றுணர்ந்த நல்லவர் தமது பெருமை தாழ்த்தப்படுவர். 25