பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

|4| உரையாசிரியர் முன்னுரை நன்னெறி என்னும் நூலின் ஆசிரியர், நல்லாற்றுர்ச் சிவப்பிரகாச அடிகளார். நல் +நெறி=நன்னெறி, வாழ்க் கைக்குப் பயனளிக்கும் நல்ல அறவழி முறைகளைக் கூறும் நூல் நன்னெறி. -

சிவப் பிரகாச அடிகளார் வீர சைவ மரபினர். சிற்றிலக்கியங்கள் முதல் பேரிலக்கியங்கள் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார். இவர் பாடல்களின் கற்பனை மிகவும் இன்பம் பயக்கும். இதனால், இவருக்குக் கற்பனைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பெயர் வழங்கப் பெற்றுள்ளது.

இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறை மங்கலம் என்னும் ஊரில் பல்லாண்டுகள் இருந்தமையால் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என முதலில் அழைக்கப் பட்டு வந்தார். இறுதிக் காலத்தில் மயிலம்-பொம்மைய பாளைய ஆதினத்தில் வந்து சேர்ந்து பல நூல்கள் இயற்றி நல்லாற்றுாரில் அடக்கமானதால் நல்லாற்றுார்ச் சிவப்பிரகாச அடிகளார் என இப்போது பெயர் வழங்கப்பெறகிறார். இந்த நன்னெறி நூலைப் பொம்மைய பாளையம் கடற்கரையில் அமர்ந்து எழுதினாராம்.

நாற்பது பாடல்கள் கொண்ட இந்நூலுக்கு உரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதற்கு முன்பே, திருமுருகாற்றுப்படை, திருக்குறள், நாலடியார், இனியவை நாற்பது என்னும் சங்க நூல்கட்கு உரையெழுதி வெளியிடச் செய்துள்ளேன். இப்பொழுது நன்னெறி நயவுரை வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நன்னெறி_நயவுரை.pdf/8&oldid=1406340" இலிருந்து மீள்விக்கப்பட்டது