பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மதிப்புரை

ஆலி ஜனாப் மெளல்வி பாசில்
சையத் அப்துல் கனி அவர்கள்

திருச்சி நகர காஜி, திருச்சிராப்பள்ளி



"மதிப்பிற்குரிய முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம்" அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நாடறிந்த நாவலர். தமிழ்க் காவலர். வாதத்திறமை பெரிதும் உடையவர். முதுமைப் பருவம் எய்திய மூதறிஞர்.

75 ஆண்டுகளை எட்டிப் பிடித்த பெரியவர். பற்பல சமயங்களைத் தர்க்க முறையில் ஆராய்ந்து அறிந்தவர்.

அப்பெரியவர் செய்து வரும் தமிழ்த் தொண்டும், சமூகத் தொண்டும், சமயத் தொண்டும் பொதுவாக எல்லாச் சமயத்தினராலும், சிறப்பாக இஸ்லாமிய மக்களாலும் மறக்க முடியாதவையாகும். தமிழகம் முழுவதுமிருந்து வருகின்ற முஸ்லீம் மக்களுடன், அவர் நீண்ட காலமாக நெருக்கமான தொடர்பு கொண்டவர். இஸ்லாமிய சமூகத்தில் அவருக்கு மிகுந்த செல்வாக்கும், நல்ல மதிப்பும் உண்டு. இஸ்லாமிய இலக்கியங்களையும், சமய உண்மைகளையும் நன்கறிந்தவர். இன்றைய இஸ்லாமியத் தலைமுறையினரில் சிலர் கூட அவர் மூலம் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள் என்பது மிகையாகாது.

சென்ற ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற அகில இந்திய மீலாத் விழாவில் நபி மணி[ஸல்-அம்]