பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110


 அதன்பின், அவருடைய மகன் உதுமான் அக்கொடியைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவரை ஹம்ஸா அவர்கள் வாளால் வீசியதும், அவரும் அங்கேயே வீழ்ந்தார். குறைஷிகளுக்குக் கோபம் மிகுதியாகி, அனைவரும் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கினார்கள்.

***

அரபு நாட்டில், அபூ துஜானா வீரத்தில் பேர் பெற்றவர். சண்டையின் தொடக்கத்தில் பெருமானார் அவர்கள், தங்கள் திருக்கரத்தில் வாளை எடுத்து, “இதன் கடமையைச் சரி வர நிறைவேற்றுபவர்கள் யார்?” என்று கேட்டார்கள்.

அதற்குப் பலர் கைகளை உயர்த்தினர். எனினும், அபூ துஜானாவுக்கே அந்தப் பெருமை கிடைத்தது.

பெருமானார் அவர்களின் சிறப்பு மிக்க வாள் தமக்குக் கிடைத்த பெருமையால் பெருமிதங் கொண்டு, தலையில் சிவப்புத் தலைப்பாகையை அணிந்து, உடலை அப்படியும் இப்படியும் வளைத்து வெளியேறினார்.

அவரைப்பார்த்து பெருமானார் அவர்கள், “இவ்விதமான நடை ஆண்டவனுக்குப் பிரியமானது அல்ல; ஆனால், இந்த நேரத்தில் இது ஆண்டவனுக்குப் பிரியமானது தான்!” என்று கூறினார்கள்.

***

ஹலரத் ஹம்ஸா, அலீ, அபூதுஜானா ஆகிய மூவரும் குறைஷிகளின் படையினுள் பாய்ந்து, அணி அணியாகக் காலி செய்து கொண்டே போனார்கள்,

அபூ துஜானா பகைவர்களின் படைகளை வெட்டி வீழ்த்தி, முன்னேறிக் கொண்டிருந்தார்.

இஸ்லாத்தின் கொடிய விரோதியான, ஹிந்தா (அபூ ஸூப்யானின் மனைவி) அபூ துஜானாவின் முன் எதிர்ப்பட்டார். அவரைக் கொல்வதற்கு வாளை உயர்த்தினார். ஆனால், திடீரென்று. பெருமானார் அவர்களின் வாளின் பெருமையை ஒரு பெண்ணிடம் காட்டுவதா என்ற எண்ணம் தோன்றி, உயர்த்திய வாளைத் தாழ்த்தி விட்டார்.