பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116


 அவ்வார்த்தைகளைக் கேட்டதும் தல்ஹா, “புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே. இந்த நற்செய்திக்குப் பின் எத்தகைய துன்பம் நேரிட்ட போதிலும், எனக்கு அது எளிதாகவே இருக்கும்” என்று முகமலர்ச்சியோடு கூறினார்கள்.

பெருமனாரை நோக்கி, குறைஷிகள் அம்புகளை எய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பெருமானாரின் திருவாயிலிருந்து “ஆண்டவனே என்னுடைய சமூகத்தார்களை மன்னிப்பாயாக! அவர்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்” என்ற சொற்கள்தாம் வந்து கொண்டிருந்தன.

அனஸ் அவர்களின் நெருங்கிய உறவினரான அபூதல்ஹா என்பவர் தம்முடைய கேடயத்தைக் கொண்டு பெருமானார் முகத்தின் முன் பிடித்து. எதிரிகளின் அம்பு தாக்காதவாறு மறைத்துக் கொண்டனர். பெருமானார் அவர்கள் எதிரிகளின் பக்கமாக தங்கள் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். அப்பொழுது அபூதல்ஹா, பெருமானார் அவர்களிடம் “தாங்கள், தலையை உயர்த்தாமல் இருக்க வேண்டும். உயர்த்தினால் அம்புகள் பாயலாம். என்னுடைய மார்பை உங்களுக்கு முன்னே வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.


89. சொன்னபடியே நடந்தது

பெருமானார் அவர்கள் தங்களைச் சேர்ந்தவர்களுடன், அருகில் இருந்த குன்றின் மீது ஏறினார்கள்.

அதைக் கண்ட அபூஸூப்யான் தம்முடைய படைகளையும், அந்தக் குன்றின் அருகில் கொண்டு செல்ல முயன்றார். ஆனால் உமர் அவர்களும், வேறு சில தோழர்களும் கற்களை எறிந்து கொண்டிருந்ததால், அவர்களால் முன்னேறிச் செல்ல இயலவில்லை.

ஆனால், குறைஷிப் படையிலுள்ள உபை இப்னு கலப் என்பவர், பெருமானாரின் அருகில் வந்து விட்டார். அவர் பத்ருப் போரின் போது, முஸ்லிம்களிடம் சிறைப்பட்டு, மீட்புத் தொகை கொடுத்து விடுதலையானவர். அப்போது விடுதலையாகிப் போகும் சமயம் பெருமானார் அவர்களிடம் “நல்ல தீனி கொடுத்து வளர்க்கப்பட்ட