பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120



92. பெண்களின் வீரப் போர்

இந்தச் சண்டையின் போது, முஸ்லிம் படையோடு பெண்கள் பலரும் வந்திருந்தனர்.

ஆயிஷா நாச்சியாரும், அனஸ் அவர்களின் தாயார் உம்மு ஸலீம் அவர்களும் போர் முனையில் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து உதவி புரிந்தனர். வேறு பல பெண்களும், இத்தொண்டில் ஈடுபடலானார்கள்.

குறைஷிகளின் தாக்குதல் பலமாயிருக்கையில், பெருமானார் அவர்களின் அருகில் மிகச் சிலரே இருந்தனர். அதைப் பார்த்த உம்மு அமாரத் என்னும் மாது, பெருமானார் அவர்களின் அருகில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டார்.

எதிரிகள் பெருமானார் அவர்களின் அருகில் நெருங்கி வரும் போது, அந்த அம்மையார் தம்முடைய வாளினாலும், அம்பினாலும் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்.

இப்னு கமீயா என்பவர் வேகமாய்ப் பாய்ந்து பெருமானார் அவர்களை நெருங்கிய போது, அந்த அம்மையாரும் முன்னே சென்று அவரை எதிர்த்து வீரமாகப் போர் புரிந்ததில், அவருக்குத் தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நிலையிலும்கூட அந்த அம்மையார் தம்முடைய வாளை அவர் மீது வீசலானார். ஆனால் அவர் இரட்டை அங்கி அணிந்திருந்ததால் வாள் வீச்சு பாதிக்கவில்லை.


93. “இது ஒரு பெரிய தியாகமா?”

போரில் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக மதீனாவுக்குச் செய்தி எட்டியது.

அங்கிருந்து ஹம்ஸா அவர்களின் சகோதரியும், பெருமானாரின் மாமியுமான ஸபிய்யா நாச்சியார் போர் முனைக்கு வந்து விட்டார்.

தமையனாரின் சின்னா பின்னப்படுத்தப்பட்ட உடலை ஸபிய்யா பார்த்தால், வேதனைப்படுவாரே என்று எண்ணிய பெருமானார், அம்மூதாட்டியின் மகனார் ஸூபைர் இப்னு அவ்வாம் அவர்கள் தம்