130
இஸ்லாத்தைத் தழுவினார்கள்; இவர்கள்தாம் அன்ஸாரிகள்-உதவி செய்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து ஓங்கிச் சிறப்படைந்தது.
யூத மதத்திலிருந்த மதிப்பு மக்களுக்குக் குறையத் தொடங்கியது.
ஒளஸ், கஸ்ரஜ் கூட்டத்தார் முஸ்லீம்களான பிற்கு, மிக ஒற்றுமையுடன் இருந்தார்கள்.
யூதர்கள் முன் போலக் கொடுமையான காரியங்கள் செய்ய இயலாதவர்களானார்கள்.
போர்களின் மூலமாக அன்ஸாரிகளுக்கு நிறையப் பொருள்கள் கிடைத்தன. அதைக் கொண்டு யூதர்களின் கடனைத் தீர்த்து, அவர்களுடைய கொடுமையிலிருந்து விடுபெற்றார்கள். அதனாலும், யூதர்களுடைய செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று.
மேலும், பெருமானார் அவர்கள் யூதர்களிடமுள்ள குறைகளை எடுத்துக் காட்டி, அவர்களைக் கண்டித்து போதனை செய்து வந்தார்கள்.
அதுவும் யூதர்களுக்குப் பெருமானாரின் மீது வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஆனால், பெருமானார் அவர்களுடன் முன்னர் செய்து கொண்ட உடன்படிக்கையை அனுசரித்து, சில காலம் வரை யூதர்கள் விரோதத்தையும், வெறுப்பையும் வெளிக்காட்டாதவாறு இருந்தார்கள்.
பின்னர், பெருமானார் அவர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் யூதர்கள் பலவாறு இடையூறு உண்டாக்க முற்பட்டார்கள்.
ஆனால், நாயகம் அவர்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், ஆண்டவனுடைய கட்டளையை ஏற்றுப் பொறுமையுடன் இருந்தார்கள்.
இஸ்லாத்தின் கெளரவத்தைக் குறைப்பதற்காக, யூதர்கள் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள்.