142
பின்பற்றி அந்தத் தேசங்களை ஜெயிப்பார்கள் என்று அறிவித்ததாயும்” சொன்னார்கள்.
ஆனால் இம் முன்னறிவிப்பு வெளியான சந்தர்ப்பம், முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியானதாயிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
சண்டைக்குத் தயாரான முஸ்லிம்களோ மூவாயிரம் பேர். மிகவும் குறைவான எண்ணிக்கை.
அவர்களை அழித்து விட வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் இருபத்து நான்காயிரம் பேர் அடங்கிய படையானது, மும்முரமான முயற்சியோடு மதீனாவுக்கு மிக அருகில் வந்துவிட்டது.
இத்தகைய இக்கட்டான நிலையில்தான் ஷாம், ஈரான், ஏமன் ஆகிய மாகாணங்களின் ஆட்சி முஸ்லிம்களின் வசமாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அகழ் வெட்டி முடிந்தது; ஸலஅ என்னும் குன்றைப் படைகளுக்குப் பின்புறமாக வைத்து பெருமானார் அவர்கள் அணி வகுத்தார்கள். பெண்களைப் பாதுகாப்பான கோட்டைகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஃஃஃ
பனூ குறைலா கூட்டத்தார் முஸ்லிம்களோடு நட்புடன் இருப்பதாகவும், அவர்களைப் பகைவர்கள் தாக்கினால், உதவி புரிவதாகவும், முன்னர் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள். அவ்வுடன்படிக்கைப்படி அவர்கள் இப்பொழுது நடந்து கொள்வார்கள் என நம்ப முடியாமல் இருந்தது. அவர்கள் மதீனாவின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களிடம் பல கோட்டைகள் இருந்ததால், முஸ்லிம்களுக்கு அவர்களைப் பற்றிய பயம் இருந்தது. அப்பகுதியில், பாதுகாப்புக்காக இருநூறு பேர் கொண்ட படை ஒன்றை அனுப்பி வைத்தனர்.