பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152



இருப்பவர்கள். அப்படியிருக்கும் போது, நீங்கள் எதற்காக முஸ்லிம்களுடன் விரோதத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்? உங்களுடைய நன்மையைக் கருதி நான் சொல்லும் யோசனையைக் கேளுங்கள். சண்டை செய்தே தீர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், குறைஷித் தலைவர்கள் சிலரை உங்களிடம் பிணையாக வைக்குமாறு கேளுங்கள். சண்டையைக் கடைசி வரை நடத்தாவிடில், அந்தத் தலைவர்களை விட முடியாது என்று சொல்லி விடுங்கள். அவ்வாறு அவர்கள் செய்தால், உங்களைக் கை விட்டு அவர்கள் ஒட மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

மேலே கண்டவாறு நயீம் கூறிய சொற்கள், யூதர்களுடைய உள்ளத்தில் நன்கு பதிந்தன. அவருடைய யோசனைப்படியே நடக்க வேண்டும் என அவர்கள் தீர்மானித்தார்கள்.


114. எதிரிகளிடையே குழப்பம்

குறைஷிகள் இருக்கும் இடத்துக்கு கத்பான் கூட்டத்தாரின் தலைவர் நயீம் சென்று அபூ ஸூப்யான் முதலான தலைவர்களை எல்லாம் அழைத்து:

“நேற்று இரவு எனக்கு இரகசியமான செய்தி ஒன்று கிடைத்தது. நான் உங்களுடைய பழைய நண்பன், உங்களுடைய நன்மையை விரும்புகிறவன். ஆகையால் உங்களிடம் சொல்லாமலிருக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. நீங்கள் ஏமாந்து விடக் கூடாது. முன்பு பனூ குறைலா கூட்டத்தார், முஹம்மதுடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தார்கள் அல்லவா? அந்த உடன்படிக்கைக்கு விரோதமாகத் தானே இப்பொழுது இந்தச் சண்டையில் சேர்ந்திருக்கிறார்கள்? அவ்வாறு மாறியதைப் பற்றி, குறைலா கூட்டத்தார் அச்சமுற்று, முஹம்மது அவர்களிடம் ஒரு சேதி இரகசியமாகச் சொல்லி அனுப்பியுள்ளார்கள்.

அதாவது “முன்னர் நாங்கள் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி, நடந்து கொண்டதற்காக மிகவும் வருந்துகிறோம். மறுபடியும், உங்களுடன் புது உடன்படிக்கை செய்து கொள்ள விரும்புகிறோம். எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டாவதற்காக, குறைஷிகளிலிருந்தும், கத்பான் கூட்டத்திலிருந்தும் சில