161
ஸைத் என்பவர் முன்னர் அடிமையாயிருந்து பின்னர், பெருமானார் அவர்களால் விடுதலை பெற்று, அவர்களுடைய உண்மைத் தொண்டராகவே வாழ்ந்தார். அவருக்குப் பெருமானார், தங்களுடைய மாமி மகளான ஸைனபைக் குறைஷிகளின் ஆட்சேபணைகளுக்கு மாறாக, இஸ்லாமிய சகோதரத்துவத்தை அனுசரித்துத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.
அந்தப் பெண்மணியும் பெருமானார் அவர்களின் கட்டளைக்கு இணங்கி, ஸைதை மணம் புரிந்து கொண்டார்.
ஆனால் ஸைத்-ஸைனப் இருவரின் இல்வாழ்க்கையானது ஒற்றுமை இல்லாமல் போகவே, இருவரும் விவாகரத்துச் செய்து கொண்டனர்.
ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்மணி குறைஷிகளின் பழிச் சொற்களால், மனச் சோர்வுற்றிருந்தார். மேலும், பெருமானார் அவர்களின் நெருங்கிய உறவாகவும் இருந்தார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டே, பெருமானார் அவர்கள், அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.
யூதர்கள், முனாபிக்குகள், குறைஷிகள் மற்றும் அரேபியாவிலுள்ள கூட்டத்தார் அனைவருமே இஸ்லாத்தை ஒடுக்குவதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்த சூழ்ச்சிகள், சண்டைகள் எதுவுமே பலிக்கவில்லை. ஆனால் மாறாக, அதன் பலம் அதிகரித்து, வளர்ச்சி அடைந்தது.
குறைஷிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, முஸ்லிம்கள் மக்காவுக்குப் போக இயலாமல் இருந்தது.
புனித யாத்திரையாக மக்காவுக்கு வருபவர்களைத் தடுப்பதற்குக் குறைஷிகளுக்கு அதிகாரம் இல்லை. எனினும், முஸ்லிம்கள் மக்காவுக்கு வர விடாமல் குறைஷிகள் தடுத்து வந்தனர்.
யாத்திரைக் காலம் அண்மையில் இருந்ததாலும், பகைவர்கள் மதீனாவைத் தாக்கக் கூடும் என்ற அச்சம் இல்லாதிருந்ததாலும்
12