பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164


பெருமானார் அவர்கள் மக்காவுக்கு அருகில் வந்திருக்கும் செய்தி அறிந்த குஸா கூட்டத்தின் தலைவர் புதைலுப்னு வர்கா பெருமானார் அவர்களிடம் சென்று “குறைஷிகள் படை திரண்டு உங்களுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றனர். கஃபாவுக்குள் உங்களை நுழைய விடாமல் அவர்கள் தடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

அதற்குப் பெருமானார் “நாங்கள் உம்ராவுக்காக வந்திருக்கிறோமே அன்றி, சண்டை செய்யும் நோக்கத்தோடு வரவில்லை. சண்டையானது குறைஷிகளை விழுங்கி விட்டது. அதனால், அவர்களுக்குப் பெருத்த நஷ்டமும் ஏற்பட்டது. என்னையும், அரபுகளையும் எங்கள் வழியாகப் போக விட்டால் இவர்களுக்கு என்ன இழப்பு வந்துவிடும்? என்னைக் கொன்று விடுவது அவர்கள் விருப்பம்; ஆனால் எனக்கு இறைவன் வெற்றியைக் கொடுத்தால் இவர்களே அணி அணியாக இஸ்லாத்துக்கு வருவார்கள். இறைவன் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். அவன் ள்ன்னிடம் ஒப்படைத்திருக்கும் இப்பணியில் வெற்றி பெறும் வரை அல்லது நான் அழியும் வரை ஒயமாட்டேன்" என்றார்கள்.

அதைக் கேட்ட புதைல், குறைஷிகளிடம் சென்று “நான் முஹம்மதிடமிருந்து தூது வந்திருக்கிறேன். நீங்கள் அனுமதித்தால் தெரிவிக்கிறேன்” என்றார்.

சில விஷமிகள், “தூதுச் செய்தி எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை” என்று கூறி விட்டனர்.

அறிவுடையோர் சிலர், “அந்தச் செய்தியை தெரிவிக்கும்படி" கேட்டுக் கொண்டார்கள்.

தூது வந்த புதைல், பெருமானார் அவர்கள் கூறியவற்றை அவர்களிடம் விவரமாகச் சொன்னார்.

அதன்பின், குறைஷிகளின் பிரமுகர் உர்வத்துப்னு மஸ்ஊத் என்பவர், “குறைஷிகளே! நான் உங்களுக்கெல்லாம் தந்தையைப் போன்றவன்; என்னிடம் உங்களுக்கு எத்தகைய சந்தேகமும் இல்லை அல்லவா? நீங்கள் எனக்கு அனுமதி அளித்தால், நான் போய் முடிவு