176
குறைஷிகளின் வியாபாரப் பொருட்கள், அல் ஈஸ் வழியாகத்தான் ஷாமுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு செல்லும் குறைஷிகளின் சரக்குகளை முஸ்லிம் கூட்டத்தினர் மடக்கிக் கைப்பற்றத் தொடங்கினார்கள்.
இந்தச் செய்தி குறைஷிகளுக்குத் தெரிந்தது. அவர்கள் பெருமானாருக்குக் கடிதம் எழுதி அனுப்பினார்கள்.
அக்கடிதத்தில்: “முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தால், அவர்களைத் திரும்ப மக்காவுக்கு அனுப்பி விட வேண்டும் என்று ஹூதையிய்யா உடன்படிக்கையில் குறிப்பிட்டிருந்த நிபந்தனையை நீக்கி விட வேண்டும் என்றும், நம் இரத்த பந்துவத்தின் பேரால் பெரிதும் வேண்டுகிறோம்" என்றும் எழுதியிருந்தார்கள்.
அதன்படி, அல் ஈஸிலிருந்த முஸ்லிம்களை எல்லோரையும் பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு அழைத்துக் கொண்டார்கள்.
அவ்வாறு வந்தவர்களுள் அபு ஜந்தலும் ஒருவர்.
அதன் பிறகு, குறைஷிகளின் வியாபாரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்தது.
மக்கா வாசிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்து வந்த சச்சரவு உடன்படிக்கையின் மூலம் ஓரளவு ஓய்ந்து, சமாதானம் ஏற்பட்டதும் இஸ்லாத்தைப் பற்றி உலகத்துக்கு அறிவிக்கப் பெருமானார் அவர்கள் எண்ணினார்கள்.
அதற்காக, தோழர்களை எல்லாம் கூட்டிச் சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தினார்கள்.
“ஆண்டவன் என்னை உலக முழுவதற்கும் அருளாகவும், தூதனாகவும் அனுப்பியுள்ளான். ஹலரத் ஈசா அவர்களின் சீடர்களைப் போல், உங்களுக்குள் வேற்றுமை எதுவும் இருக்கக் கூடாது. என் சார்பாக, நீங்கள் போய் ஆண்டவனின் தூதை