பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185



மடத்தில் பெருமானார் அவர்களின் மேற்படி கடிதம் அகப்பட்டது. அதில் உள்ள எழுத்துகள் அக்காலத்திய அரபி எழுத்தில் எழுதப்பட்டிருந்தன. டாக்டர் பாட்ஜர் என்பவர் அதைப் பிரித்து எடுத்து இக்காலத்திய எழுத்தில் எழுதினார்.

அதில் காணப்படும் வாசகத்துக்கும், இஸ்லாமிய வரலாற்றில், மிஸ்று தேச அரசருக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் வாசகத்துக்கும் கொஞ்சம் கூட வேறுபாடு இல்லை.

அக்கடிதத்தின் இறுதியில், “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்ற முத்திரை ஒன்று இடப்பட்டிருக்கிறது. வரலாறுகளிலும் அவ்வாறு முத்திரையிடப் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அக்கடிதம் இப்பொழுது கான்ஸ்டாண்டி நோபில் அரண்மனையில் இருக்கிறது.


139. யூதர்களின் பொறாமை

மதீனாவிலிருந்து இருநூறு மைல் தொலைவில் உள்ளது கைபர். அது செழிப்பான ஒரு பகுதி. அதனால் யூதர்கள் அங்கே சென்று கோட்டை கட்டிக் கொண்டு வாழ்ந்தனர். பனூ நலீர் கோத்திரத்தைச் சேர்ந்தோர் மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, அங்கே குடியேறினர் என்பதை முன்னர் படித்தோம். அப்பொழுது முதல், யூதர்களுக்கு கைபர் மிகவும் முக்கியமான இடமாக இருந்தது.

முஸ்லிம்களின் செல்வாக்கு, யூதர்களைப் பொறாமைப் படச் செய்தது.

முன்பு அகழ்ச் சண்டையைத் தூண்டியவர்கள் அங்கே இருந்த யூதர்களே.

கைபரில் உள்ள யூதர்களுக்கு ஹுயையுப்னு அக்தப் என்பவர் தலைவராக இருந்தார். பனூ குறைலாச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார்.

அவருக்குப் பின் அபூராபி அஸ்லம் என்பவர் தலைமை வகித்தார். அவர் மிகுந்த செல்வாக்குள்ள வியாபாரி.