212
அதற்குப் பெருமானார் அவர்கள், “அல்ல; அவர்கள் அன்று முதல் மேன்மை அடைவார்கள்” என்று கூறினர்கள்.
பெருமானார் அவர்கள் திறவு கோலைக் கொடுக்கும் போது உதுமானிடம் முன் அறிவிப்பைப் பற்றி நினைவு படுத்தினார்கள்.
பெருமானாரின் பெருந்தன்மையான உள்ளத்தைக் கண்டு, உதுமான் அப்பொழுதே இஸ்லாத்தைத் தழுவினார்.
அடுத்து, பெருமானார் அவர்கள் தங்களின் பெரிய தந்தையான அப்பாஸ் அவர்களை அழைத்து, “யாத்திரிகர்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறினார்கள்.
அதன் பின்னர், மக்கா நகரம் முழுவதும், பெருமானார் அவர்கள் கீழ்க்காணும் விஷயத்தை அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அது வருமாறு: “ஒரே நாயன் மீதும் நியாயத் தீர்ப்பு நாளின் மீதும் யார் விசுவாசம் உள்ளவரோ, அவர் தம் வீட்டிலுள்ள விக்கிரஹத்தை துண்டு துண்டாக்காமல் இருக்க மாட்டார்".
பெருமானார் அவர்கள் கஃபாவிலிருந்து வெளியே வந்ததும், குறைஷிகளுக்கு ஒரு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
அதன்பின், அவர்கள் மக்கள் கூட்டத்தைப் பார்த்தார்கள். நாயகத்துக்கும், முஸ்லிம்களுக்கும் பொறுக்க முடியாத துன்பத்தை உண்டாக்கிய கொடியவர்கள் பலர் பெருமானார் அவர்களின் முன்னே நின்றார்கள்.
கருணைக் கடலான பெருமானார் அவர்கள் அங்கே கூடியிருந்தோரை “குறைஷி வம்சத்தினரே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அவர்கள் எல்லோரும் அநியாயக்காரர்கள், கொலைகாரர்கள், கல் நெஞ்சர்கள் ஆனாலும் பெருமானார் அவர்களின் கருணை