247
ஒரு குறிப்பிட்ட தொகை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, பெருமானார் அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டு தங்கள் நகரத்துக்குப் புறப்பட்டார்கள்.
ஸகஸ் என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம, பெருமானார் அவர்களைக் காண வந்தது. அக்கூட்டத்தின் தலைவர்களில் ஆமீர் என்பவனும் அர்பத் என்பவனும் முக்கியமானவர்கள்,
ஆமிரும், அர்பத்தும் பெருமானார் அவர்களைக் கொன்று விட வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, தூதர்களுடன் மதீனாவுக்கு வந்தார்கள்.
ஒரு நாள், ஆமீர் பெருமானார் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர்களை வெட்டி விடுமாறு, அர்பத்துக்கு முன் கூட்டியே சொல்லியிருந்தான்.
அர்பத் பெருமானார் அவர்களை வெட்டுவதற்காக, அருகில் வந்து கையை உயர்த்த முற்பட்டான். ஆனால், அவன் கையோ அசையவில்லை. கண்கள் இருளடைந்து விட்டன. திகில் அடைந்து மரம் போல் அப்படியே நின்று விட்டான்.
அதன்பின் ஆமிர், பெருமானார் அவர்களிடம் தனிமையில் பேச வேண்டும் என்று சொன்னான்.
“நீர் ஒரே ஆண்டவன்மீது விசுவாசம் கொள்வதாக உறுதி கூறும் வரை, உம்மோடு நான் தனித்துப் பேச முடியாது” என்று பெருமானார் அவர்கள் கூறினார்கள்.
உடனே ஆமிர், “நீங்கள் எதிர்த்துச் சண்டை செய்ய முடியாத படி பெரிய சேனையைக் கொண்டு வந்து உங்களைத் தாக்குவேன்” என்றான். -
அப்போது பெருமானார் அவர்கள், “ஆண்டவனே! ஆமிருக்கு எதிராக, நீயே போதுமானவன்” என்று சொன்னார்கள்.