58
மறுநாள் காலையில் கஃபாவுக்குப் போனதும், அங்கிருந்த மக்களை நோக்கி, “மக்காவாசிகளே! நாம் அனைவரும் சுகமாகக் காலம் கழிக்கிறோம். பனூ ஹாஷிம் குடும்பத்தார், உணவும் தண்ணீரும் இல்லாமல் வாடுகின்றார்கள். ஆண்டவன் பேரில் சத்தியமாக இந்த அக்கிரமமான உடன்படிக்கையைக் கிழித்து எறியும் வரை நான் சும்மா இருக்கமாட்டேன்” என்றார் ஹூபைர்.
உடனே அபூஜஹில் எழுந்து, இந்த உடன்படிக்கையைக் கிழிக்க யாராலும் முடியாது” என்றார்.
அப்போது ஸம் ஆ என்பவர் எழுந்து, "நீ பொய் சொல்லுகிறாய்; இதை எழுதும் போது நாங்கள் யாருமே இதற்குச் சம்மதம் அளிக்கவில்லையே” என்றார்.
பின்னர் மூவரும் சேர்ந்து ஆயுதங்கள் சகிதமாய், பனூ ஹாஷிம்கள் இருக்கும் பள்ளத்தாக்குக்குச் சென்று அவர்கள் அனைவரையும் அழைத்து வந்துவிட்டனர்.
பெருமானார் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் செலுத்திய அன்புக்கும் செய்த தியாகங்களுக்கும் அளவில்லை.
அதனால் அவர்கள், அரேபியர்களுடைய பகைமையைப் பெறவேண்டியதாயிற்று.
பெருமானார் அவர்களும் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்கள்.
ஒரு சமயம், அபூதாலிப் அவர்கள் நோயுற்றிருந்த போது அவர்களைக் காண சென்றார்கள் பெருமானார் அவர்கள்.
அப்பொழுது, “என் சகோதரர் குமாரரே! எந்த ஆண்டவன் உம்மை நபியாக அனுப்பியிருக்கிறானோ அந்த ஆண்டவனிடம், என்னுடைய நோய் குணமாகும்படி நீர் பிரார்த்தனை செய்யக் கூடாதா?’ என்று கேட்டுக் கொண்டார் அபூதாலிப்.
அவ்வாறே பெருமானார் அவர்கள், “ஆண்டவனிடம் பிரார்த்தளை செய்தார்கள்”.