பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 99 நிகழ்வுகளும் தவறாகத் தமிழக வரலாற்றிற்கு முரணான முறையில் விவரிக்கப் பட்டுள்ளன. அவைகளை இப்பொழுது பார்ப்போம். பாண்டியநாடு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று பாண்டியர்களால் ஆளப்பட்டது என்பது அந்த நூலில் குறிப்பிடப் பட்டுள்ளதாகும். இதற்கான ஆதாரம் பாண்டிய, சோழ, நாஞ்சில் நாட்டு கல்வெட்டுக்களில் காணப்பெறவில்லை. அடுத்ததாக சுல்த்தான் செய்யது இபுராஹிம் அவர்கள் கி.பி. 1187 - இல் காயல் நகரை வந்தடைந்த பொழுது அங்கு கோப்பாண்டியன் என்ற சடையவர்மன் குலசேகரனும், மதுரையில் திருப்பாண்டியனும், பெளத்திர மாணிக்கப் பட்டிணத்தில் விக்கிரம பாண்டியனும் ஆட்சி செய்து வந்ததாக அந்த நூலில் இடம் பெற்றுள்ளது. இதில் விக்கிரம பாண்டியன் என்ற பாண்டியனது பெயர் மட்டும் தான் பாண்டியரது வம்சாவழிப் பட்டியலுக்குப் பொருந்தி வருகிறது. ஏனைய கோப் பாண்டியன், திருப்பாண்டியன் என்ற பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இங்கு குறிப்பிட்டுள்ள தமிழக வரலாற்றின் இயையுடைய பெயரான விக்கிரம பாண்டியனது ஆட்சிக் காலம் கி.பி. 1181 - 1190 ஆகும். இவர் பூரீ வல்லப் பாண்டியனது (கி.பி. 1145 - 1162) மகனாவான். விக்கிரம பாண்டியன் பெளத்திர மாணிக்கப் பட்டினத்தை ஆட்சி செய்த பொழுது சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களால் ஹிஜ்ரி 583-ல் அதாவது கி.பி. 1188 - இல் கொல்லப்பட்டான் என அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது வரலாற்றிற்கு ஏற்புடையதாக இல்லை. அத்துடன் விக்ரம பாண்டியனது தலைநகரம் மதுரை ஆகும். சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள் காயல் நகரிலிருந்து கோப்பாண்டியனது ஆதரவு பெற்று, திருநெல்வேலிப் பகுதியில் சன்மார்க்கப் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மதுரை வந்த பொழுது மதுரையிலிருந்த திருப்பாண்டியன், சுல்தான் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் இதனால் ஏற்பட்ட பூசலில் மதுரைப் பாண்டியன் வடக்கே ஒடி விட்டதாகவும் ஷகீது சரிதையில் கூறப்பட்டுள்ளது. மதுரையில் இத்தகைய போர் ஒன்று