S.M. கமால் 1Ο1 என்பதற்கும் அதனை அடுத்து அவனது மகன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1190 - 1218 வரை தொடர்ந்து மதுரை மன்னனாக இருந்தான் என்பதற்கும் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பெளத்திர மாணிக்கப் பட்டிணத்துப் போரில் சுல்த்தான் அவர்களால் கொல்லப்பட்ட பாண்டியன் விக்கிரம பாண்டியன் அல்ல வேறொருவனாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. இதனைப் போன்றே வடக்கேயிருந்த வந்த முன்னாள் மதுரை மன்னனான திருப்பாண்டியன் சுல்த்தான் அவர்களை இரண்டாவது பெளத்திர மாணிக்க பட்டினப் போரில் (26.9.1.198-ல்) ஹிஜ்ரி 594 துல்காயிதா பிறை 23-ல் கொன்றதாக குறிப்பிடப்பட்டிருப்பதும் தவறான செய்தியாகும். அந்தக் கால கட்டத்தில் மதுரையிலிருந்த மன்னன் சடையவர்மன் குலசேகரன் தான் சுல்தான் அவர்களைப் போரில் கொன்றிருக்க வேண்டும் என்பதே பொருத்தமான உண்மை ஆகும். ஏனெனில் இந்த மன்னன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை கி.பி. 1190 வரை ஆட்சி செய்துள்ளான் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. இவைகளிலிருந்து சுல்த்தான் செய்யது இபுராகிம் சகீது அவர்களைப் பற்றியவை இஸ்லாமிய பஞ்சாங்க ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கில் சரியாக குறிக்கப் பெற்று உள்ளது. அதாவது ஹிஜ்ரி 583-க்கும் ஹிஜ்ரி 594-க்கும் இடைப்பட்ட கால நிகழ்ச்சிகள் அவையனைத்தும் உண்மை நிகழ்ச்சிகள் என உறுதிபடக் கொள்ள லாம். இஸ்லாமியப் பஞ்சாங்க முறைக்கு கிறித்தவ ஆண்டுமுறை கணக்கிடப்பட்டுள்ள விபரத்தை அடுத்த இயலில் பார்க்கலாம். ஆனால் அவைகளில் குறிப்பிட்டுள்ள பாண்டியர்களது பெயர்கள் மட்டும் தவறானதாகவும் தமிழக வரலாற்று ஆவணங்களுக்கு முரணானதாகவும் உள்ளன் என்பது தெளிவு. 1) மேற்படி நூல் குடுமியான் மலை
பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/107
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
