பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நபிகள் நாயகம் வழியில் யால் மன்னரின் ஆட்சிக்குத் தீங்கு ஏதும் இல்லையெனக் கூறி அந்தக் குழந்தையைச் சாதுரியமாகக் காப்பாற்றிவிட்டார். அந்தக் குழந்தை அரண்மனையிலேயே சீரும் சிறப்புமாய் வளர்ந்தது. இக்குழந்தைக்கு மூஸா என்று பெயரிட்டனர். மூஸா என்பது ஹிப்ரு மொழிச் சொல்லாகும். மூ என்றால் நீர் என்று பொருள். ஸா என் பதற்கு மரம் என்பது பொருளாகும். நீரில் மரப்பெட்டியில் மிதந்து வந்த குழந்தையாதலால் மூஸா எனப் பெயரிட்டு அழைத்தனர். அரண்மனையில் வளர்ந்து வாலிப நிலையடைந்தார். ஒரு நாள் அரண்மனைக்கு அருகே ஏற்பட்ட சிறு சச்சரவில் எதிர்பாராமல் ஒருவனை மூஸா கொல்ல நேர்ந்தது. கொலைக்குற்றத் தண்ட ணைக்குப் பயந்து அரண்மனையை விட்டு மூஸா வெளியேறினார். வெளியேறிய அவர் மத்யன் என்ற இடத்திற்குச் சென்று அங்கு சுஐப் (அலை) அவர்களிடம் பத்து ஆண்டுகள் ஆடுமேய்க்கும் பணி யாற்றினார். அவரின் அன்பு மகள் சபுராவைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் எகிப்து திரும்பும் வழியில் அவர் ஒரு நபி என்பது இறைவனால் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் பிர்அவ்னை நேர் வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பும் இறைவனால் இவருக்குச் சுமத்தப்பட்டது. இறைக்கட்டளைப்படி பிர்அவ்ன் அரண்மனைக்குச் சென்று, மன்னனைக்கண்டார். தானே இறைவன் எனும் மன்னன் பிர்அவ்னின் ஆணவத்தையொழித்து, வல்ல இறைவன் ஒருவனே என்றும் அவனே வணங்குதற்குரியவன் என்றும்' உபதேசித்தார். இதனைச் சிறிதும் ஏற்காத மன்னன், நபி மூஸா அவர்களுக்குப் பல வகையிலும் இன்னல்களை விளைவித்தான். இன்னல்களைப் பொறுக்கமட்டும் பொறுத்து, பொறுக்க முடியாத நிலையில் இறை வனின் ஆணைப்படி பனு இஸ்ரவேலர்களுடன் வெளியேறினார். செல்லும் வழியில் செங்கடல் குறுக்கிட்டது. மூஸா அவர்கள் இறைவனின் ஆணைப்படி, தம் கைத்தடியை அடிக்க, செங்கடல் இரண்டாகப் பிளந்து நபி மூஸாவும் அவர்தம் கூட்டத்தார்களும் செல்ல வழி விட்டது. இவர்களைத் துரத்தி வந்த பிர்அவ்ன் படையினர் செங்கடல் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.