பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 3 நாயகம் பற்றிய சிந்தனையில் சுல்தான் செய்யது இபுராஹிம் அவர்களது சிந்தனையில் சில னைவுகள் பளிச்சிட்டன. நி மக்கமா நகரில் இறை இல்லமாகிய கஃபாவிலிருந்து ஒரு நாள் மாலை முஹமது நபி ஸல்லல்லாகு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்த போது குரைஷியர் சிலர் இறைதூதர் வருகிறார் என்று சொல்லி அவரை ஏளனம் செய்ததுடன் இறந்துபோன ஒட்டகம் ஒன்றில் அழுகிப் போன குடல் மற்றும் கழிவுகளை அவரது தலையில் கொட்டினார்கள். துர்நாற்றம் மிகுந்த அந்தக் கழிவுப் பொருட்களை மெதுவாகத் தனது கரங்களால் உதறிக் கொண்டிருந்த பொழுது அவரது அருமந்தப் புதல்வி பாத்திமா அவர்கள் தற்செயலாக அந்தப் பகுதிக்கு வந்தார். தந்தையின் நிலையைக் கண்டு மிகுந்த துயரமடைந்தார்கள். அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரின் தலைப்பாகை, மேலங்கி போன்றவற்றைக் கழற்றிச் சுத்தம் செய்தார் முஹமது நபி அவர்கள் தமது மகளுக்கு நன்றி கூறியதுடன் அவரை இழிவுபடுத்திய அறிவிலிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.