பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 29 உடல்நலம் எப்படி உள்ளது. பரவாயில்லை சரியாகி விடும் என நம்புகிறேன் என்று அந்த வயதான பெண்மணி கூறினாள். இறைவன் தங்களுக்குப் பூரண நலம் கொடுக்க இறைஞ்சு கிறேன் என்று சொல்லியவாறு விடை பெற்றுச் சென்றுவிட்டார்கள். இந்த சந்திப்பு அந்த அம்மையாருக்கு ஒரு வியப்பை உண்டாக்கியது. தமது இனத்தவர் யூதர் பரப்பிய செய்தியை நம்பி நல்ல மனிதருக்கு எவ்வளவு பெரிய தீங்கைச் செய்துவிட்டோம் என எண்ணி வருந்தினார். மக்கா நகருக்குச் சில கல் தொலைவில் அமைந்து இருந்தது அந்தக் கிராமம். பெரும்பாலும் யூத இனத்தைச் சார்ந்த குடிகள் வாழ்ந்த சிற்றுர் அது. அவர்களில் உவைசு என்ற நடுத்தர வயது மனிதர் வாழ்ந்து வந்தார். அந்த நல்ல மனிதர் அந்த ஊர்குடி மக்களை விட சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் சற்று வேறுபட்டவராகவே காணப்பட்டார். அண்மையில் உள்ள மக்கா நகரில் முஹமது என்ற இளைஞர் தம்மை இறைவனது தூதர் எனச் சொல்லிக் கொண்டு மக்கா நகர மக்களிடையே ஆன்மீகப் பிரச்சாரம் செய்து வருவதையும். மக்கள் பேணி வந்த பல தெய்வ வழிபாடு, குடிப்பழக்கம், விபச்சாரம், ஆண்களையும், பெண்களையும் விலங்குகளைப் போல் அடிமையாக நடத்துவது ஆகிய செயல் களைச் சாடி வருவதையும் கேள்விப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவருக்கு நபி பெருமானாரிடம் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டது. ஒருநாள் மக்கா நகரில் இருந்த வந்த பயணி ஒருவரிடம் மக்கா நகரச் செய்திகளை உவைசு என்ற அந்த பெரியவர் விசாரித்தபோது அந்த நகரின் மூட மக்கள் ஒரு நாள் நாயகம் அவர்களை கல்லால் எறிந்து துன்புறுத்தியதாகவும், அப்போது அவர்களது வாயில் முன் பற்கள் இரண்டு உடைந்துவிட்டதாகவும் கேள்விப்பட்டார். பெரியவர் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. காரணம் முஹம்மது நபி