பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 59 பெயரிடப்பட்டுள்ளது. சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர் களுக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். இத்தகைய முதல் வெற்றியினால் மகிழ்ச்சியுற்ற சுல்த்தானும் அவரது குழுவினரும் தங்களது சமயப் பணியினை மிகவும் தீவிரமாகத் தென்பாண்டிய நாட்டில் தொடர்ந்து வந்ததுடன் அடுத்து வடக்கு நோக்கி தங்களது பணியினைத் தொடங்குவதற்கு தக்க ஆயத்தங்களைச் செய்வதில் முனைந்து வந்தனர். திட்டமிட்டபடி சுல்த்தான் அவர்கள் தம்முடன் வந்திருந்த பல நூறு தொண்டர்களில் ஒரு பிரிவினரை மட்டும் காயல் நகரில் தங்கி இருக்குமாறு செய்து விட்டு, மற்றவர்களுடன் வட திசையில் மதுரை நோக்கிப் பயணமானார்கள். +