பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 67 தொடர்ந்த அந்தப் போரில் இரு தரப்பினருக்கும் மிகுதியான ஆட்சேதம் ஏற்பட்டது. விக்கிரம பாண்டியனது மக்கள், மருமக்கள் ஆகிய முக்கியமான தளபதிகள் கொல்லப்பட்டனர் என்பதை இஸ்லாமிய வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. இதனைப் போன்றே சுல்த்தானது அணியைச் சேர்ந்த மிகச் சிறந்த வீரர்களான செய்யது காதிர், அப்பாஸ், சம்சுதீன், இமையான், முகையதீன் ஆகியோர்கள் வீரமரணம் அடைந்ததுடன், சுல்த்தான் அவர்களது தம்பியான செயினுள் ஆபிதீனும் சுல்த்தான் அவர்களது குமாரரான அபுதாஹீரும் சகிது (தியாகிகள்) ஆனார்கள். எஞ்சியிருந்த வீரர்களைத் திரட்டிச் சுல்த்தான் அவர்கள் மிகுந்த வீராவேசத்துடன் பாண்டியனது படைகளைப் பொருதி அழித்தார்கள். இறுதியாக விக்கிரமபாண்டியனும், சுல்தான் அவர்களது வாளுக்கு இரையானான். பெளத்திர மாணிக்கப் பட்டிணத்தில் கோட்டை அரண்மனை, கருவூலம் ஆகியவை சுல்த்தான் செய்யது இபுராஹிமின் உடைமை ஆகியன. இந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்றது ஹிஜ்ரி 583. துல்கயிதா பிறை 10 (1.1.1.1.188) ஆகும். பாண்டிய நாட்டு வரலாற்றில், இந்த நிகழ்ச்சி ஒரு புதிய திருப்பு முனையாக அமைந்தது. பாண்டிய நாட்டில் புதிய ஆட்சி மக்காவிலிருந்து மதின மாநகர் சென்ற முகம்மது நபி அவர்கள் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக விளங்கியதுடன் இஸ்லாம் மார்க்கம் பரவிய பாரசீகம், சிரியா போன்ற நாடுகளின் நிர்வாகத்தை யும் ஏற்று நடத்தியது போல இப்பொழுது சமயப் பிரச்சாரத்திற்காகப் பாண்டிய நாடு வந்த சுல்தான் செய்யது அவர்கள், அந்த நாட்டின் அரசு பதவியில் அமர்ந்து நீதி பரிபாலனம் செய்யும் அரிய வாய்ப்பினை இறைவன் அவர்களுக்கு அளித்து மகிழ்ந்தான். சுல்தான் அவர்களது தொண்டர்கள் அதிகாரப் பூர்வமான முறையில் பாண்டிய நாடு முழுவதும் பயணம் செய்து மக்களைப் புதிய தெய்வ சமயமாகிய இஸ்லாத்தில் இணையும் வாய்ப்பினை