பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களது பொன்னுடலைப் புனித சேது நாட்டு மண் தாங்கிப் பொன்றாத புகழ்கொண்டது” என்றவரிகளைப் பயின்றபோது உள்ளம் விம்மிதமுற்று விழிகளில் நீர்த் திரையிட்டது! இவ்வாறு... உணர்வுளை மகிழ்விலாழ்த்தியும் நெகிழ்வினையூட்டியும் நிறைவான வரலாற்றுடன் பிணைத்து இழுத்துச் செல்லும் நற்றமிழ் நடையழகும். நனிசிறக்கும் சரித்திரச் சான்றுகளும் பொங்கிப் பிரவசிக்கும் "நபிகள் நாயகம் வழியில்” எனும் இந்நூல் படிக்கவும் பயிலவும் மட்டுமல்ல, பாதுகாக்கவும் வேண்டிய தென்பதை உணரலாம். திருக்குர்ஆன் விவரிக்கின்ற திருநபி (ஸல்) வாழ்வு சார்ந்த சிற்சில தவறான தகவல்கள் ஆசிரியரின் கவனத்தில் எவ்வாறு விடுபட்டதென்று தெரியவில்லை. உதாரணமாக முதல் ஆலயமான கஅபாவை இப்ராஹீம் நபி நிர்மாணித்தார் என்பதற்குப் பதிலாக மூசா நபி என விவரிக்கப்பட்டிருப்பது, நபித்துவத் திருப்பணிகுறித்து 23 ஆண்டுகளுக்கு மேலாக என்றிருக்க வேண்டிய இடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக என்றிருப்பது, பதுருயுத்தத்தின் கைதிகள் விஷயத்தில் இடம் பெற்றுள்ள பெயர்த்தகவல், மற்றும் “ஹிந்தா” எனும் பெண்மணி மூலம் ஹம்ஸா (ரலி) அவர்களுக்கு உஹதுப் போரில் ஏற்பட்ட அவலநிலையை பதுருப் போருடன் சம்பந்தப்படுத்தி விபரிக்கப் பட்டுள்ள விஷயங்களாகும். இவற்றை உணர்ந்து சரிகாணும் வாய்ப்பிருந்தால் ஒச்சமற்ற நூலாக இது மிகவும் மெச்சப்படத்தக்கதாகும். ஆசிரியரின் அரும்பணிதொடர அகமார வாழ்த்துவோம். இப்படிக்கு, எம்.ஏ. அஸ்மத் ஊசேன் ஆலிம்