பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 தனக்கொன்றை வேண்டிடுங்கால் தம்போன்ற மற்றோர் தமக்கும் அது போல்கிடைக்க வேண்டுவதே மேலாம் தனக்குத்தீங் கானவொன்றை மற்றோர்க்கும் தீங்காய்த் தானினைத்தொ துக்குவதே நற்பண்பென் றாகும் தனக்கொன்றும் பிறர்க்கொன்று மாய்நினைக்கும் பேர்கள் தாழ்வான குணமுடையோர் ஆகிடுவார் இதனை நினைந்தொழுகும் மானிடனே மேலவன்என் றுரைத்த நீதியரே முஹம்மதரே வாழியரோ வாழி.