பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 செய்கின்ற பாவங்கள் அனைத்திற்கும் இறைவன் திருவுள்ளம் நாடிடுமேல் மன்னிப்புக் கிட்டும் மெய்நோகப் பெற்றெடுத்த தாய்தந்தைக் கிழைக்கும் பெரும்பிழைக்கு மட்டும்என்றும் மன்னிப்பே இல்லை உய்த்திதனை ஓர்ந்துணர்ந்து நடந்திடுக உலகில் உறைகின்ற மானிடர்காள் என்றுரைத்த வல்லோன் மெய்தூத ரானவரே வானவரும் வாழ்த்தும் மேலான முஹம்மதரே வாழியரோ வாழி.