பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பூகம்பம் புயற்காற்றுப் போன்றவைகள் தீமை புரிவோரை எச்சரிக்கப் படைத்திட்டான் இறைவன் மோகித்துத் தீயசெயல் புரிகின்ற பேர்கள் விட்டதனை நன்நெறியைப் பற்றிடுதல் வேண்டும் வேகமுடன் பாவந்தினம் புரிகின்ற செல்வர் மீதிறைவன் வேதனையை இறக்கிடுவான் என்ற ஆகமங்கள் புகழுமிறைத் தூதுவரே தீமை அகற்றவந்த முஹம்மதரே வாழியரோ வாழி.