பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அழகிளமை இவற்றினொடு வறுமையிடைப் பட்ட ஆளனிலா விதவையெனும் குழந்தையுள மாது மழலைதனை வளர்ப்பதற்காய் மறுமணத்தை நாடா மனக்கட்டுப் பாடுடனே வாழ்ந்திடுவா ளாகில் இலையவளுக் கீடானாள் வையமிதில் என்றே எடுத்துமிகத் தெளிவாக விளக்கியுரைத் திட்ட மலைநிகர்த்த மனம்படைத்த இறையவனின் தூதே மாநபியே முஹம்மதரே வாழியரோவாழி.