பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒழுக்கமுடன் வாழும்படி பிள்ளைகளைப் பயிற்றல் ஒவ்வொருதாய் தந்தையரின் முன்புள்ள கடனாம் புழுக்களென அழுக்குமனம் கொண்டவராய்ப் பெற்ற பிள்ளைகளை வளர்ப்பவரை ஆண்டவன் தண் டிப்பான் இழுக்காகும் மானிடரே இதனை நன்கு ணர்ந்தே இனியநெறி தனில்நடக்கப் பிள்ளைகளை வளர்ப்பீர் விலக்கலேவல் இன்னதென விளக்கிடுவீர் என்றே விளம்பியநன் முஹம்மதரே வாழியரோ வாழி.