பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 இறையவனின் அருட்கொடைகள் யாவினிலும் மேலாய் இயம்பிடலாம் துதிக்கின்ற நாவுதனை மற்றும் நிறைவுடனே செய்நன்றி நினைக்கின்ற நெஞ்சம் நிகழ்கின்ற விபத்துக்களைத் தாங்கும்நல் லுடம்பு குறையில்லாக் கற்புடைய மனைவியுமே மேலோன் கொடைகளிலே சிறப்புடைய தாகுமென்று ரைத்த மறையவனின் தூதுவரே அப்துல்லா பெற்ற மாமணியே முஹம்மதரே வாழியரோ வாழி.