பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பகற்கொள்ளை யிடுகின்ற பாலைவன நாட்டில் பழிக்கஞ்சா மறமாக்கள் வாழ்ந்திருந்த நாட்டில் மகப்பேறு பெண்ணாக இருந்திட்டால் அதனை மடித்திடுமாச் சிசுக்கொலைகள் மலிந்திருந்த நாட்டில் சழக்கரெனத் தீமை சகத்தார்கள் இகழுகின்ற தனைச்செய்வோர் தலைவர்களாய் ஆகிவிட்ட நாட்டில் யுகப்புரட்சி செய்துஅவரை நல்லவராய்ச் செய்த உத்தமரே முஹம்மதரே வாழியரோ வாழி.