பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 தனக்கென்று யாரிடத்தும் எதையும்கேட் பதில்லை தருவதையும் இனாம்என்றால் ஏற்றுக்கொள்வ தில்லை தனக்கென்று தன்னுழைப்பில் கிடைப்பதையுங் கூட சங்கடத்தில் உழல்வோர்க்கு வழங்கிடுதல் செய்து மனக்கவலை சிறிதுமின்றி வறுமையிலே வாழ்ந்து வருவோருக் குண்பதையும் பகிர்ந்தளித்தே அன்பால் நினைக்கவொணாப் புகழ்தன்னைக் காலடியில் கொண்ட நேர்மைமிகும் முஹம்மதரே வாழியரோ வாழி.