கவிஞரின் கைவண்ணம் தத்துவக் கருத்துக்களை முத்தாரமாகத் தொகுக்கும் வித்தாரம் அறிந்த கவிஞரின் கை வண்ணத்தில் அற நெறிச் சாரமாக வடிவம் பெற்றுளது இந்நூல். இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் அதனை வளர்த்த இறைத்தூதர் சிறப்புப் பற்றியும் ஏனைய மதம் சார்ந்த பலரும் எளிதில் உணர்ந்து போற்றும் வண்ணம் தெள்ளெனத் தொகுக்கப் பெற்றுள்ள இப்பாமாலையில் நெஞ்சம் நிறையும் கருத்துக்கள் ஏகமாய் உள்ளன. அரிய பெரிய கருத்துக்களை மிகவும் எளிய நடையில் சொல்லிப் புரிய வைத்திடும் கலையில் கவி காமு ஷெரீப் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். நபிகள் நாயகம் முஹம்மது (சல்) அவர்களின் வாழ்க்கையில் துளித்துளியாக நிகழ்ந்த சம்பவங்களைச் சுவையாகவும், அவையே மக்களுக்கு அறிவுரையாகவும் அமையும் வண்ணம் முழுதும் எண்சீர் விருத்தங்களாக உருப்பெற்றுள்ள இந்நூல் பயனுள்ள நூலே இஸ்லாமியர்கள் மட்டுமின்றி தமிழன்பர்கள் பலரும் இந்நூலை வாங்கிப் படித்து இதன் அரிய கருத்துக்களில் பேரின்பம் உய்க்க வேண்டுகிறோம். கோலாலம்பூர் 30-7-72 "தமிழ் நேசன் (நாளேடு) கோலாலம்பூர்.
பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/148
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை