பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/2

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சொற் கவிதைகள்

இறை வாழ்த்துடன் தொடங்கும் இந்நூலில், நபிகள் நாயகம் (சல்) அவர்களின் போதனைகள், பழகு தமிழில், அழகு மிளிர செஞ்சொற் கவிதைகளாக வடிவெடுத் துள்ளன.

நெஞ்சினிக்கும் அக்கவிதைகளை வடித்திருப்பவர், தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்கு அறிமுகமான மூத்த கவிஞர் கவி காமு ஷெரீப் ஆவார். எளிய இனிய நடையில் கவிதைகளை எழுதியுள்ளார். தென்றலென நடைபோடும் கவிதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன தெளிவடையச் செய்கின்றன. நூலைப் படித்து முடித்ததும் ஒரு சில நிமிடங்களிலேயே நாயகமவர்களின் நற்போதனைகளை அறிந்து கொண்ட மன நிறைவு ஏற்படுகிறது. கவிதை நயம் சொட்டும் அண்ணல் நபியின் போதனைகள் அடங்கிய இந்நூலை முஸ்லிம் பெருமக்கள் மட்டுமின்றி தமிழ றிந்த அனைவரும் வாங்கிப் படித்துப் பயன டைய அவாவுகின்றோம். கோலாலம்பூர் 10-9-72 "தமிழ் மலர் (நாளேடு) கோலாலம்பூர் 00